கின்னஸ் சாதனை இயக்குனர், நடிகை விஜயநிர்மலா காலமானார்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பழம்பெரும் நடிகையும் இயக்குனருமான விஜயநிர்மலா ஐதராபாத்தில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 73.


Advertisement

சென்னையை சேர்ந்த விஜய நிர்மலா குழந்தை நட்சத்திரமாக திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர். இவர் 7 வயதில் மச்சரேகை (1950) படத்தில் நடித்தார். பின்னர், எங்க வீட்டு பெண், சித்தி, சோப்பு சீப்பு கண்ணாடி, என் அண்ணன், ஞான ஒளி உட்பட பல படங்களில் நடித்தார். ’பணமா பாசமா’ படத்தில் ’எலந்தப்பழம்’ பாடல் மூலம் பிரபலமானவர். எம்ஜிஆர், சிவாஜி, முத்துராமன் உட்பட அப்போதைய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். 


Advertisement

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், 44 படங்களை இயக்கியுள்ளார். அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்று கின்னஸ் புத்தகத்திலும் அவர் இடம்பெற்றார்.

இவர் கிருஷ்ணமூர்த்தி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு நரேஷ் என்ற மகன் உள்ளார். இவர் தெலுங்கு சினிமாவில் நடித்துவருகிறார். கிருஷ்ணமூர்த்தியை விவாகரத்து செய்த பின், நடிகர் கிருஷ்ணாவை (தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தந்தை) திருமணம் செய்துகொண்டார். 


Advertisement

ஐதராபாத்தில் வசித்துவந்த அவர் நெஞ்சு வலி காரணமாக ஐதராபாத் கச்சுபவுலியில் உள்ள கான்டினென்டல் மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டிருந்தார். இன்று அதிகாலை அவர் மரணமடைந்தார். அவர் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement