மாடுகள் உள்ளிட்ட உயிரினங்களுக்காக ‘தண்ணீர் சேவை’ - நாம் தமிழர் முயற்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் உயிரினங்களுக்காக நாம் தமிழர் கட்சி சார்பில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. 


Advertisement

கோடை வெயிலால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் காலிக்குடங்களுடன் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். தண்ணீரின்றி ஏரளமானோர் தவித்து வருகின்றனர். மக்கள் மட்டுமின்றி மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள், யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களும் தண்ணீரின்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன.


Advertisement

இந்நிலையில் மாடுகள், ஆடுகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் தாகம் தீரும் வகையில் நாம் தமிழர் கட்சியினர் ஆங்காங்கே சிறிய தண்ணீர் தொட்டி அமைத்துள்ளனர். அந்த தொட்டிகளில் ‘நாம் தமிழர் கட்சி அனைத்து உயிர்களுக்குமானது’ என எழுதப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பல மேடைகளில் உயிரினங்கள் தண்ணீரின்றி இறப்பது தொடர்பாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement