தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதில் ஒரு இடத்தை தருமாறு அதிமுகவிடம் பாஜக கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் முடிகிறது. இதனை அடுத்து விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது சட்டப்பேரவையில் உள்ள பலத்தின் அடிப்படையில் அதிமுக மற்றும் திமுக தலா 3 எம்பிக்களை தேர்வு செய்ய முடியும். ஏற்கனவே கூட்டணி ஒப்பந்தப்படி பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுக தரும் வாய்ப்புள்ளது. எனவே அதிமுகவிடம் 2 இடங்களே இருக்கும்.
இந்நிலையில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜக, அதிமுகவிடம் இருக்கும் 2 இடங்களில் ஒரு இடத்தை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி ஒரு எம்பி பதவியை பாஜகவுக்கு வழங்கினால் அதிமுக வசம் ஒரு மாநிலங்களவை எம்பி பதவி மட்டுமே மிஞ்சும். இதனால் நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்களின் எண்ணிக்கை மேலும் குறைந்துவிடும். உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் பாஜகவுக்கு எம்பி பதவியை விட்டுக் கொடுப்பது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அதிமுக நிர்வாகிகள் கருதுவதாக தெரிகிறது.
Loading More post
ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்?
திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!
தொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!