சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த 9 பேரும் எம்.எல்.ஏ.க்களாக இன்று பதவியேற்க உள்ளனர்.
தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 18-ம் தேதியும், 4 தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதியும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 23 ஆம் தேதி மக்களவை தேர்தலுடன் சேர்த்து எண்ணப்பட்டன. இதில் அதிமுக 9 இடங்களிலும் திமுக 13 இடங்களிலும் வெற்றி பெற்றன.
அதிமுக சோளிங்கர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, மானாமதுரை, சாத்தூர், பரமக்குடி, விளாத்திக்குளம், சூலூர் ஆகிய 9 இடங்களிலும் வெற்றி பெற்றன.
திமுகவைச் சேர்ந்த 13 பேரும் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எம்.எல்.ஏ.க்களாக நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த 9 பேரும் எம்.எல்.ஏ.க்களாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பதவியேற்கின்றனர்
இன்று காலை 9 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவைத் தலைவர் தனபால் அறையில், அவர் முன்னிலையில் பதவியேற்கவுள்ளன. இந்த பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’