தமிழகம் முழுவதும் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்திலுள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் கோடை விடுமுறை விடப்பட்டன. விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளி கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது.
இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பாடநூல்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் சென்றடைந்துவிட்டதா என்பது குறித்து 31ஆம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 3ஆம் தேதி அன்றே அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா பாடநூல்கள், நோட்டுப்புத்தகம் மற்றும் இதர விலையில்லா பொருட்களை வழங்க வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாடநூல்கள் தங்களின் தேவைப்பட்டியலின்படி பெறப்பட்டுள்ளதா என்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Loading More post
விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டி?
''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
பாலியல் வன்கொடுமைக்கு உரிமமா திருமணம்? தலைமை நீதிபதிக்கு வலுக்கும் கண்டனங்கள்!
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?