உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாருக்கு முகாந்திரம் இல்லை என்ற முடிவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது என்று புகார் அளித்த பெண் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இந்தப் புகாரை அடுத்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, இதுகுறித்து விசாரிக்க மூத்த நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார். மேலும் இக்குழு ரகசியமாக விசாரணை நடத்தும் எனக் கூறப்பட்டது. நீதிபதி பாப்டே தலைமையிலான குழுவில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில் இன்று இக்குழு தலைமை நீதிபதி மீதான புகாரில் முகாந்திரம் ஏதுமில்லை எனக் கூறி மனு தள்ளுபடி செய்தது. இதுகுறித்து புகார் அளித்த பெண் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உள்விசாரணை குழுவின் முடிவு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. இந்த முடிவினால் நீதித்துறை மீதான நம்பிக்கை எனக்கு குறைந்துள்ளது. ஏனென்றால் உயர் பதவியில் இருப்பவர்கள் மீது புகார் அளிப்பவர்களுக்கு நீதி கிடைக்கும் வாய்ப்பு குறைவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக விசாரணை குழுவிற்கு வழக்கறிஞருடன் தன்னை ஆஜராக அனுமதிக்குமாறு இவர் முறையிட்டிருந்தார். அதற்கு விசாரணை குழு அனுமதி மறுத்தால், புகார் அளித்த பெண் உள் விசாரணை குழுவின் முன் ஆஜராகவில்லை எனக் கூறி விசாரணையிலிருந்து விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!