குடும்பத் தகராறில் மாமியாரின் காதை கடித்து துப்பிய மருமகன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரை அருகே குடும்ப தகராறில் மாமியாரின் காதை கடித்து துப்பிய மருமகனை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.


Advertisement

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் முத்துக்குமார்-கவிதா தம்பதியினர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள், தனியே வசித்து வந்தனர். இந்தச் சூழலில் முத்துக்குமார்-கவிதா தம்பதியினருக்கு குழந்தை இல்லாததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர். மேலும் விவாகாரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.


Advertisement

இந்நிலையில் நேற்று மாலை கவிதா வீட்டிற்கு சென்ற முத்துக்குமார் அங்கு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தடுக்க வந்த கவிதாவின் தாயார் லட்சுமியை முத்துக்குமார் சண்டையிட்டு காதை கடித்து துப்பியுள்ளார். இதனால் அவர் அலறியுள்ளார். பின்னர் அருகிலுள்ளவர்கள் லட்சுமியை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related image

இதனிடையே சமயநல்லூர் போலீசாருக்கு இச்சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்தப் புகாரின் பேரில் குடும்பத் தகராறில் மாமியாரின் காதை கடித்து துப்பிய மருமகன் முத்துக்குமாரை கைது செய்த சமயநல்லூர் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement