தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பங்களுக்கு நிவாரணம்: திமுக வலியுறுத்தல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.


Advertisement

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை சரித்திரத்தில் வைரவிழா காணும் கருணாநிதிக்கு வாழ்த்துத் தெரிவித்தும் முழு அடைப்புக்கு ஆதரவளித்த கட்சிகள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்டந்தோறும் கருத்தரங்கு நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கும் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழக அரசு முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். குடிநீர் பஞ்சத்தைப் போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Advertisement
loading...
Related Tags : dmk stalinarivalayam dmk stalin

Advertisement

Advertisement

Advertisement