ரூ.50 லட்சம் பிணையில்லா கடன் : பிரதமர் மோடி வாக்குறுதி 

Modi-says-Rs-50-lakh-bailout-loan-in-Election-Campaign-in-Traders-meeting

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வணிகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி ரூபாய் 50 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.


Advertisement

டெல்லியில் நடைபெற்ற வர்த்தகர்கள் சங்க கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, வர்த்தகர்கள், வியாபாரிகள் இந்நாட்டில் முதுகெலும்பு என்றார். அவர்களின் பங்கு இல்லை என்றால் இந்திய பொருளாதாரம் உலக அரங்கில் இரண்டு மடங்கு அதிகரித்து இருக்காது எனத் தெரிவித்தார். கடந்த ஐந்தாண்டுகளாக பாரதிய ஜனதா ஆட்சியில் வியாபாரிகளுக்கு கடன் பெறுவதற்கான வசதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளதாக கூறிய மோடி, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய வர்த்தகர் நல வாரியம் அமைக்கப்படும் என்றும், வர்த்தகர்களுக்கு எந்தவித பிணையும் இன்றி 50லட்சம் ரூபாய் வரை கடன் உதவி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

Image result for modi in Traders meeting


Advertisement

மேலும் பேசிய அவர், சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்றும் வர்த்தகர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரையிலான கடனை வெறும் 59நிமிடத்தில் கிடைக்க வழிவகைச் செய்துள்ளதாக மோடி கூறினார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement