மோடியை எதிர்த்து வாரணாசியில் களமிறங்குகிறார் பிரியங்கா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரதமர் மோடி போட்டியிடவுள்ள வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 11ஆம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டத் தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு தேர்தல் பரப்புரைகள் மற்றும் வேட்பாளர்களின்  வேட்புமனு தாக்கல் என தேர்தல் களம் அனல் பறந்துவருகிறது.


Advertisement

இந்நிலையில், பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியிடப் போவதாக தொடர்ச்சியாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. தற்போது, பிரியங்கா காந்தி அதனை ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து இறுதி முடிவை கட்சியின் தலைவர் ராகுல் காந்தி எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு மண்டல பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். அப்போது முதல் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தொண்டர்கள் பிரியங்கா காந்தி தங்கள் மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தனர். ஆனால் அதற்கு பிரியங்கா காந்தி மறுத்துவந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, “பிரியங்கா காந்தி ஒப்புக்கொண்டால் இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.  இந்தச் சூழலில் தற்போது பிரியங்கா காந்தி வாரணாசி தொகுதியில் போட்டியிட ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Advertisement

வாரணாசி மக்களவை தொகுதியில் 1991ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களில் 2004ஆம் ஆண்டு தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் பாஜக வெற்றிப்பெற்றுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட மோடி 3.70 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை வாரணாசி தொகுதிக்கு வரும் மே 19ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement