நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. நாடெங்கும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த முதல் கட்ட வாக்குப்பதிவு 18 மாநிலங்களிலும் 2 யூனியன் பிரதேசங்களிலும் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இது தவிர உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாகவும் ஒடிஷா சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஆந்திரத்தில் தேர்தல் நடைபெறும் 25 மக்களவைத் தொகுதிகளில் 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதேபோல், மொத்தமுள்ள 175 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,118 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆந்திரம், தெலங்கானா மாநிலங்கள் தனித்தனியாக 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரிக்கப்பட்டன. அதையடுத்து நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் இதுவாகும். தெலுங்கு தேசம் கட்சியின் 37 ஆண்டுகால வரலாற்றில், தேர்தலை அக்கட்சி தனித்து எதிர்கொள்வதும் இதுதான் முதல்முறையாகும்.
ஆந்திர முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வழக்கமாக போட்டியிடும் சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதியில் போட்டியிடுகிறார். இது தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் ஆந்திர தலைநகர் அமராவதியில் அமைந்துள்ள மங்கள கிரி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான ஜெகன்மோகன் ரெட்டி, கடப்பா மாவட்டம் புலிவெண்டுலாவில் போட்டியிடுகிறார். தெலுங்குதேசம் கட்சிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் சவாலாக திகழும் ஜனசேனா கட்சியின் தலைவரும் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் தம்பியுமான பவன் கல்யாண் பீமாவரம் மற்றும் கஜவாக்கா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
ஆந்திரா முன்னாள் முதல்வர் என்டி ராமராவின் மகள் புரந்தேஸ்வரி விசாகப்பட்டினத்தில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகனின் ஒன்றுவிட்ட சகோதரர் அவினாஷ் ரெட்டி கடப்பா தொகுதியில களமிறங்கியுள்ளார். மக்களவை தொகுதிகளை பொறுத்தவரை விஜயநகரம் தொகுதியிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் அசோக் கஜபதி ராஜு களம் காண்கிறார்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி