மாவோயிஸ்ட் துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் வீர மரணம்  

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிஆர்பிஎஃப் வீரர் உயிரழந்துள்ளார்.


Advertisement

சத்தீஸ்கர் மாநிலம் கால்லாரி மற்றும் போராய் காவல்துறை பகுதிகளில் 50 சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் 10 மாவட்டப் படை வீரர்கள் மாவோயிஸ்ட்டுகளை தேடும் பணியில் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டுவந்தனர். 


Advertisement

இந்நிலையில் சாமெடா கிராமப் பகுதியில் சிஆர்பிஎஃப் மற்றும் மாவோயிஸ்ட்டுகளிடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் 211 பட்டாலியன் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் மரணமடைந்தார். மேலும் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தார். இதுகுறித்து காவல்துறை அதிகாரி, “நாங்கள் பதில் தாக்குதல் நடத்திய போது மாவோயிஸ்ட்டுகள் தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவத்தில் ஒரு வீரர் உயிரிழந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே சத்தீஸ்கரின் மாநிலம் கான்கர் மாவட்டத்திலுள்ள மஹலா கிராமத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்தச் சூழலில் இன்று மற்றொரு சிஆர்பிஎஃப் வீரர் மரணமடைந்துள்ளார். அதேபோல மார்ச் மாதம் 18ஆம் தேதி சத்தீஸ்கரின் டாண்டேவாடா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிஆர்பிஎஃப் வீரர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement