நரேந்திர மோடியின் சுய சரிதைப் படமான 'பிஎம் நரேந்திர மோடி' இன்று ரிலீஸ் செய்யப்படாது என்று படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை 'பிஎம் நரேந்திர மோடி' என்ற பெயரில் ஓமங்குமார் என்பவர் இயக்கியுள்ளார். சந்தீப் சிங் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் மோடியாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபரார் நடித்துள்ளார். இந்தப்படம் நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்தே எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்த நிலையில் தேர்தல் ஆதாயத்திற்காக பல காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
இதனிடையே டெல்லி உயர்நீதிமன்றத்தில் பல பேர் பி.எம்.நரேந்திர மோடி படத்திற்கு எதிராக மனுத்தாக்கல் செய்தனர். இதுகுறித்த விசாரணையில் தேர்தல் விதிமுறைகளை இந்தப் படம் மீறுவதாக நாங்கள் கருதவில்லை எனவும் ‘பி.எம்.நரேந்திர மோடி’ படத்திற்கு தடை விதிக்க முடியாது எனவும் கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது. மேலும் உச்ச நீதிமன்றத்திலும் தொடரப்பட்ட வழக்கில், வரும் திங்கட்கிழமை விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று திரைப்படம் வெளியாகுமா இல்லையா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் இன்று படம் ரிலீஸ் ஆகாது என படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்தக்கட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்
Loading More post
இந்தியாவில் சாமானியர்களுக்கு 'சாத்தியமில்லாத' வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகள்!
தினசரி கொரோனா பாதிப்பு 7,000-ஐ நெருங்கியது: தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
அதிதீவிரமாக பரவும் கொரோனா... நெருங்கும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் - முடிவுதான் என்ன?
மதுரை சித்திரை திருவிழா: திருக்கல்யாண நிகழ்விற்கு பின் பக்தர்களுக்கு அனுமதி!
கொரோனாவும் ஐந்து மாநில தேர்தலும்: அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!