சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு - ஆர்.எஸ்.எஸ் தலைவர் உட்பட 4 பேர் விடுவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து 4பேரை விடுதலை செய்துள்ளது என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம்.


Advertisement

ஹரியானா மாநிலத்தின் பானிபட் மாவட்டத்தில், சம்ஜௌதா விரைவு ரயிலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 68பேர் உயிரிழந்தனர். 2007ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி இந்தச் சம்பவம் நடைபெற்றது. உயிரிழந்தவர்களில் 16 பேர் குழந்தைகள். அதோடு, உயிரிழந்தவர்களில் 42 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை பஞ்ச்குலாவில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடிந்து திங்கட்கிழமை தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளர் அசீமனந்த், லோகேஷ் சர்மா, கமல் சவுகான், ராஜிந்தர் ஆகியோரை வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவிக்கப்பட்டுள்ளனர். 


Advertisement

குற்றச்சாட்டுகளை நிரூபிக்க என்.ஐ.ஏ போலீசார் தவறிவிட்டதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement