உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் வருவதாக சிஎஸ்கே வீரரான இம்ரான் தாஹிர் ட்வீட் செய்துள்ளார்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் தென்னாப்ரிக்க சுழல் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் அவ்வப்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டு கலகலப்பை ஏற்படுத்துவார். தன் பந்துவீச்சில் விக்கெட்டை எடுத்துவிட்டு மைதானத்தையே ஒரு சுற்று ஓடி வரும் தாஹிருக்கு பராசக்தி எக்ஸ்பிரஸ் என சென்னை ரசிகர்கள் செல்லப்பெயரும் வைத்துள்ளனர்.
இந்நிலையில் 12 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 23 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியே சென்னையில் தான் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விராத் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
இதற்காக சிஎஸ்கே அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். சில நாட்களாக பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் வருவதாக பராசக்தி எக்ஸ்பிரஸ் இம்ரான் தாஹிர் ட்வீட் செய்துள்ளார். அதில் ''என் இனிய உடன்பிறப்புகளே நலமா? உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் வரும் உங்கள் சகோதரன். அடிச்சு தூக்கலாமா? எடுடா வண்டிய, போடுடா விசில'' என்று தெரிவித்துள்ளார்.
வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ள அவர், ''சென்னையில் உள்ள சகோதர சகோதரிகளே.. போட்றா விசில... வருகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
Yen iniya udan pirapugaley nalama ? Ungal anaivaraiyum sandikka avaludan varum ungal sagotharan.adichu thookalama @ChennaiIPL #eduda vandiya poduda whistle pic.twitter.com/HGpWVVreoD— Imran Tahir (@ImranTahirSA) March 19, 2019
Loading More post
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு - தமிழக அரசு
9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
PTExclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும் தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?