மதுரையில் கார் ஓட்டுநர் கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் ஐந்து பேர் சரணடைந்துள்ளனர்.
மதுரை கே.புதூர் களத்துப்பொட்டல் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் அழகுராஜா. இவர் நள்ளிரவு கற்பகம் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வழி மறித்த கும்பல் ஒன்று, சரமாரியாக குத்திக் கொலை செய்தது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அழகுராஜாவை சாலையில் சென்றவர்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதூர் காவல்துறையினர் அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில், காவல்துறையால் தேடப்பட்டு வந்த மதுரையைச் சேர்ந்த மாரிமுத்து, மணிகண்டன், பாலமுருகன், சதீஷ்குமார், முகேஷ் குமார் ஆகிய 5 பேர், மதுரை மாவட்ட ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா முன்னிலையில் சரணடைந்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Loading More post
வன்முறையுடன் எங்களுக்கு தொடர்பில்லை - விவசாயிகள்
டெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி