விருதுநகரில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி தேவகி. இவர் கடந்த 17ம் தேதி விபத்தில் சிக்கி மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் விபத்தில் படுகாயம் அடைந்த தேவகி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் தேவகியின் சிறு நீரகங்கள், கல்லீரல், கண்கள் நல்ல நிலையில் இருப்பதால் உடலுறுப்பு தானம் செய்து சிலருக்கு மறு வாழ்வு கொடுக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். உடல் உறுப்பு தானத்துக்கு தேவகியின் கணவர் ஒப்புக்கொள்ள, சுமார் 5 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின் தேவகியின் உடலுறுப்புகள் அகற்றப்பட்டு, 5 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.
அதன்படி ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வெவ்வேறு நோயாளிகளுக்கும், மற்றொரு சிறுநீரகம் திருநெல்வேலி கிட்னி கேர் சென்டரில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு பொருத்தப்பட்டன. கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் தானமாக கொடுக்கப்பட்டது.
Loading More post
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஐஜேகே, ச.ம.கட்சிக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கீடு
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை