கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யுடியூபில் ‘திங்க் மியூசிக் இந்தியா’ மூலம் வெளியான ‘சகா’படத்தின் பாடலை 2 கோடிக்கும் (24.4 மில்லியன்) அதிகமான பேர் கண்டு ரசித்துள்ளனர். இயக்குநர் முருகேஷ் இயக்கத்தில் இன்று வெளியான ‘சகா’ படத்தில் இடம்பெற்றிருந்த இந்த “யாயும் ஞாயும் யாராகியரோ” என்ற பாடல் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் வரும் பாடலாகும். இதனை நரேஷ் ஐயர் மற்றும் ரிடா இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இளம் இசையமைப்பாளர் ஷபிர் இதற்கு இசையமைத்துள்ளார். இது இவருக்குமூன்றாவது படம். இப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் மட்டுமே உள்ளன.
குறுந்தொகை பாடல்: 40
குறிஞ்சி - தலைவன் கூற்று:
“யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’’ என்ற இந்தச் சங்க இலக்கிய பாடலைதான் ஷபிர் தன் பாடலில் பயன்படுத்தியுள்ளார்.
யாய் = என்னுடைய தாய்; ஞாய் = உன்னுடைய தாய்;
எந்தை = என் தந்தை; நுந்தை = உன் தந்தை; கேளிர் = உறவினர்;
செம்புலம் = செம்மண் நிலம்; பெயல்நீர் = மழைத்துளி;
பாடலின் பொருள்:
என் தாயும் உன் தாயும் யார் யாரோ?
என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானார்கள்?
எந்த உறவின் வழியாக நானும் நீயும் அறிந்துகொண்டோம்?
செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல
அன்புடைய நம் நெஞ்சம் தாமாக ஒன்றுபட்டனவே!
இப்படி செம்மண் நிலத்திலிருக்கும் நீர் போல் தலைவனும் தலைவியும் ஒன்றுபட்டிருந்தனர் என்று குறிஞ்சித் தலைவன் பாடுவதாக அமையப்பெற்றது இதன் பொருள்.
மணி ரத்னம் இயக்கிய, 1997 இல் வெளியான ‘இருவர்’ படத்திலும் இதேபாடல் இடம்பெற்றது. ஏ.ஆர். ரகுமான் இசையில் அமைந்த நறுமுகையே நறுமுகையே பாடலில் அமையப்பெற்ற
இவ்வரிகள்,
பெண்: யாயும் ஞாயும் யாராகியரோ னென்று நேர்ந்ததென்ன
யாயும் யாயும் யாராகியரோ னென்று நேர்ந்ததென்ன
ஆண்: யானும் நீயும் எவ்வழி அறிந்தும் உறவு சேர்ந்ததென்ன
பெண்: ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கோடி பூதத் என்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கோடி பூத்ததென்ன
ஆண்: செம்புலம் சேர்ந்த நீர் துளி போல்
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன
இந்தச் சில வரிகளே மனதிற்குள் புகுந்து துளைக்க ஆரம்பித்துவிடுகிறது. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகை. இதில் இன்னும் 400 பாடல்கள் இருக்கிறது. அதை எல்லாம் இன்றைய திரை இசையில் சேர்த்து பாடலாக்கினால் அது பரவலான மக்களை சென்றடையும். தமிழ் இலக்கியமும் செழுமை அடையும்.
நடிகர் மாதவன் இந்த பாடலைக் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பண்டைய தமிழ்ப்பாடலுக்கு, ஷபிர் புத்துயிர் கொடுத்துள்ளார்’ என்று தெரிவித்துள்ள கருத்து குறிப்பிடத்தக்கது.
https://t.co/LiaAhEhOAr Listen to Yaayum by @shabirmusic. Reviving an ancient Tamil poem".— Ranganathan Madhavan (@ActorMadhavan) August 13, 2016
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!