‘நரி ஜல்லிக்கட்டு’க்கு தடை வேண்டும் - பீட்டா வேண்டுகோள்

PETA-India-calls-for-ban-of-fox-jallikattu-events-in-parts-of-Tamil-Nadu

தமிழகத்தில் நடைபெற்று வரும் நரி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.


Advertisement

பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான காணும் பொங்கல் அன்று சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நரி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். வாழப்பாடி, ஆத்தூர் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் பொங்கலையொட்டி வங்கா நரிகளை பிடித்து வந்து, ஊரை சுற்றி ஜல்லிக்கட்டு நடத்துவார்கள். 

வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தினால்தான், அந்த ஆண்டு முழுவதும் விவசாயம் செழிப்பாக இருக்கும் என்றும், நோய், நொடிகள் இன்றி வாழலாம் என்றும் நம்புவதாக கிராம மக்கள் கூறுவார்கள். ஜல்லிக்கட்டிற்கு முன்பாக காணும் பொங்கலன்று நரியை கோயில் முன்பு பூ, மாலையால் அலங்காரம் செய்து வழிபடுவார்கள். 


Advertisement

             

இதுதொடர்பாக தமிழக வனத்துறையின் தலைமை வனவிலங்கு பாதுகாவலருக்கு கடிதம் எழுதியுள்ள பீட்டா, நரி ஜல்லிக்கட்டை தடுத்து நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பீட்டா இந்தியா அமைப்பின் தலைமை வழக்கறிஞர் பிரகாஷ் சாஷா கூறுகையில், “1972ம் ஆண்டு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி வங்கா நரி, பட்டியல் 2ல் வருவதால், அதனை பிடித்து ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வன விலங்குகள் பாதுகாப்பு சட்டப்படியும் தண்டனைக்குரிய குற்றமாகும். . நாகரிகமான சமுதாயத்தில் நரிகளை கட்டாயப்படுத்தி தெருக்களின் வழியே ஓட விடுவது ஏற்புடையது அல்ல” என்று கூறியுள்ளார். 

              


Advertisement

முன்னதாக, நரி ஜல்லிக்கட்டு தமிழக கலாச்சாரத்தில் வருகிறதா? என்ற தகவலை ஆர்.டி.ஐ மூலம் தமிழக அரசிடம் பீட்டா அமைப்பு கேட்டுள்ளது. நரி ஜல்லிக்கட்டு தமிழ் கலாச்சாரத்தின் ஒரு பகுதி அல்ல என்று பதில் கிடைக்கவே, அதன் அடிப்படையில் வனத்துறைக்கு பீட்டா இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.

            

கலாச்சாரத்தில் இல்லாத ஒன்றினை பழக்கப்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று தன்னுடைய கடிதத்தில் பீட்டா கேட்டுக் கொண்டுள்ளது. சட்டவிரோதமாக நரி ஜல்லிக்கட்டு நடத்துபவர்களிடம் அபராத தொகை மட்டும் வசூலிக்கப்பட்டு வருவதாக, போலீசாரும் தெரியும் அதனை கண்டு கொள்வதில்லை என்றும் பீட்டா கூறுகின்றது.  

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement