கஜா புயல் பாதித்த திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டம்?

Hydrocarbon-scheme-in-gaja-affected-thiruvarur-region

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான மற்றொரு ஏல அறிவிப்பை மத்திய பெட்ரோலியத்துறை வெளியிட்டுள்ளது. இம்முறை கஜாப் புயலால் பாதிக்கப்பட்டுள்ள இடங்கள் ஏலம் விடப்பட உள்ளதாக தெரிகிறது.


Advertisement

விளை நிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதற்கு மத்தியில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எரிவாயு எடுக்க மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் ஏலம் விட்டிருந்தது. அப்போது ஓஏஎல்பி- பிரிவில் நாடு முழுவதும் 55 இடங்களுக்கு ஏலம் விடப்பட்டது.

       


Advertisement

அதில் தமிழகத்திலுள்ள 3 இடங்களும் அடங்கும். அவற்றில் இரு இடங்களை வேதாந்தா நிறுவனம் ஏலத்தில் எடுத்தது. தமிழகத்தில் எதிர்ப்பு அதிகமாக கிளம்பியபோது, இங்கு கடல் பகுதியே ஏலம் விடப்பட்டதால் பாதிப்பு இருக்காது என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் கூறியிருந்தார்.

அந்த விவகாரம் ஓரளவு ஓய்ந்திருந்த நிலையில் தற்போது ஓஏஎல்பி பிரிவில் இரண்டாம் சுற்று ஏலத்தை ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் அறிவித்துள்ளது. மார்ச் 12ம் தேதி வரை அதற்காக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, குஜராத், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் 14 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

         


Advertisement

அதில் தமிழகத்திலும் ஒரு பகுதி அடங்கும். கஜாப் புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் மாவட்டம் திருக்காரவாக்கல் முதல் நாகை மாவட்டம் காரியப்பட்டினம் வரை சுமார் 244 சதுர கிமீ அளவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு புயலால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement