“இது எனக்கு ஒரு பாடம்”- மன்னிப்பு கேட்ட நடிகர் சக்தி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக நடிகர் சக்தி நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்றைய செயலுக்காக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று மன்னிப்பு கேட்டுள்ளார்.


Advertisement

‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ஏதோ செய்தாய் என்னை’ உள்பட சில படங்களில் நடித்தவர் இயக்குநர் பி.வாசுவின் மகன் சக்தி. ‘பிக்பாஸ்’முதல் சீசனிலும் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பின்னரும் தற்போது புதுப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.


Advertisement

இதனிடையே சென்னை சூளைமேட்டில் மதுபோதையில் தனது சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக நடிகர் சக்தி நேற்று கைது செய்யப்பட்டார். இளங்கோவடிகள் தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்ட சக்தி, சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி மற்றொரு கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை உடனடியாக மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து விபத்துக்குள்ளான காரின் உரிமையாளர் செல்வம் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இதன்பே‌ரில் சக்தியை கைது செய்த காவல்துறையினர் பின்னர் ஜாமீனில்‌ விடுவித்தனர்.


Advertisement

இந்நிலையில் தனது நேற்றைய செயலுக்காக சக்தி இன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், “ நேற்றைய செயலுக்காக உண்மையில் மிகவும் வருந்துகிறேன். இதுபோன்ற செயல் மீண்டும் நடக்காது என்பதை உறுதி கூறுகிறேன். இந்தச் சம்பவம் எனக்கு ஒரு பாடம். உண்மையாக வருந்துகிறேன் நண்பர்களே.. என்னை மன்னித்து விடுங்கள். அத்துடன் குடித்துவிட்டு வண்டி ஓட்டாதீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement