JUST IN

Advertisement

ஒடிசா வேளாண்மைத்துறை அமைச்சர் ராஜினாமா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஒடிசாவின் வேளாண்மைத்துறை அமைச்சர் பிரதீப் மகாரதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.


Advertisement

ஒடிசா மாநிலம் பிபிலி பகுதியைச் சேர்ந்த 19 வயது பட்டியல் வகுப்பைச் சேர்ந்த மாணவியை மர்ம நபர்கள் சிலர் பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் புபனேஷ்வர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து அந்தமாநில வேளாண்மைத்துறை அமைச்சர் பிரதீப் மஹாரதி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். 


Advertisement

இதனைக் கண்டித்து அமைச்சர் பிரதீப் மஹாரதி பதவி விலகக்கோரி காங்கிரஸ் மகளிர் அணியினர் துடைப்பத்துடன் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் பா.ஜ.க மகளிர் அணியினரும் 24 மணி நேரத்தில் அமைச்சர் பிரதீப் மஹாரதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு இறுதி கெடு விதித்திருந்தனர்.


Advertisement

இந்நிலையில் ஒடிசாவின் வேளாண்மைத்துறை அமைச்சர் பிரதீப் மகாரதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவர் ராஜினாமா செய்ததற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரிவிக்கப்பட்டவில்லை. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement