[X] Close >

ராணுவ ரீதியில் முக்கியத்துவமான போகிபீல் பாலம்: சிறப்பம்சங்கள் என்னென்ன?

Narendra-Modi-inaugurates-Bogibeel-rail-cum-road-bridge

ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய ரயில் பாலத்தை அசாமில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். வடகிழக்கு மாநிலங்களின் கனவு திட்டமான போகிபீல் பாலம் 21 ஆண்டு கால கட்டுமானப் பணிகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. கடந்த 1997-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் எச்.டி.தேவகவுடா, போகிபீல் பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய நிலையில் 21 ஆண்டுக்கு பிறகு அப்பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்தப் பாலம் பிரம்மபுத்திரா நதியின் மேலே சுமார் 4.98 கிலோ மீட்டர் தூரத்துக்குச் செல்கிறது. இதுவே நாட்டின் முதல் நீளமான பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. மேலும் ஆசியாவின் இரண்டாவது நீளமான பாலமும் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இப்பாலத்தின் சிறப்பம்சங்களை காணலாம்


Advertisement

  • பிரம்மபுத்திரா நதியின் மீது நீண்டு செல்லும் இந்த பாலம் இந்தியாவின் பொறியியல் அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 
  • நதியின் மேல் 4.94 கிலோ மீட்டர் நீளத்திற்கு செல்லும் இந்த பாலம், இரு அடுக்குகளை கொண்டது. கீழ் அடுக்கில் ரயிலும் மேல் அடுக்கில் பிற வாகனங்களும் செல்லும் வகையில் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. 
  • சுமார் 5 ஆயிரத்து 690 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இப்பாலம் அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் இடையிலான பயண நேரத்தை 10 மணி நேரம் குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
  • 1997ல் அப்போதைய பிரதமர் தேவகவுடாவால் அடிக்கல் நாட்டப்பட்டு, 2003ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் இப்பாலத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.


Advertisement
  • ரயில் பாதை மற்றும் சாலை என இரு அடுக்குகளை கொண்ட இப்பாலம் ஆசியாவிலேயே இந்த வகையில் 2வது நீளமான பாலமாகும். ஐரோப்பிய தர நிர்ணய அளவுகோல்களின் படி முற்றிலும் வெல்டிங் மூலம் இணைக்கப்பட்டுள்ள இப்பாலம் 120 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது எனக் கூறப்படுகிறது. 
  • சீனாவின் எல்லையில் உள்ள அருணாசலப்பிரதேசத்தை நாட்டின் பிற பகுதிகளில் இருந்து எளிதில் அணுகும் வகையில் இப்பாலம் அமைந்துள்ளதால் ராணுவ ரீதியிலும் இது முக்கியத்துவம் மிக்க பாலம் என கூறப்பட்டுள்ளது. 
  • அவசர காலங்களில் போர் விமானங்கள் இப்பாலத்தின் மீது இறங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close