இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் நியமிக்கப் போவதில்லை என்று அதிபர் சிறிசேன கூறியுள்ளார்.
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் மஹிந்தா ராஜபட்சவை பிரதமராக அதிபர் மைத்ரிபால சிறிசேன பதவி பிரமாணம் செய்து வைத்த நாள் முதல் இலங்கை அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. நாடாளுமன்றத்தில் ராஜபட்சவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலை இருந்த போது, நாடாளுமன்றத்தை சிறிசேன அதிரடியாக கலைத்தார்.
பின்னர், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து வழக்குகள் தொடர, அதிபர் சிறிசேனவின் உத்தரவுக்கு இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. நாடாளுமன்ற நடவடிக்கைக்கும் தடையில்லை என நீதிமன்றம் தெரிவித்தது. பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ராஜபட்ச தோல்வியை தழுவினார். சமீபத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றார்.
இதனிடையே, நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனவின் உத்தரவு சட்டவிரோதமானது என்று இலங்கை உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. அதிபர் சிறிசேன தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
தீர்ப்பு வெளியானதை அடுத்து, சிறிசேனா தன்னுடைய கட்சி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மஹிந்தா ராஜபட்சவும் கலந்து கொண்டார்.
இந்நிலையில், திங்கட்கிழமை புதிய பிரதமரை அதிபர் சிறிசேன நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று அதிபர் சிறிசேன கூறியுள்ளார்.
Loading More post
இந்தியா: 24 மணி நேரத்தில் 2.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!
பிரதமர் மோடி மேற்குவங்க தேர்தலில் பிஸியாக இருக்கிறார் - மகாராஷ்டிரா முதல்வர் குற்றச்சாட்டு
கட்டுக்குள் அடங்காத கொரோனா - கடந்த 10 நாட்களில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
கொரோனாவால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு - மம்தா பானர்ஜி
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி