காங்கிரஸ்க்கு பகுஜன் சமாஜ் ஆதரவு : மாயாவதி 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.


Advertisement

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடர்ந்தது. குறிப்பாக மத்தியப் பிரதேசத்தில் இன்று காலை 8 மணி வரை வாக்கு தொடர்ந்தது.  மொத்தம் 230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் 229 தொகுதிகளின் வெற்றி நிலவரம் நேற்றிரவு தெரியவந்தது. அதன்படி 113 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி கண்டது. பாஜக 109 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும், சமாஜ் வாதி கட்சி 1 இடங்களிலும் வெற்றி பெற்றன. சுயேட்சைகள் 4 இடங்களில் வெற்றி கண்டனர். 1 தொகுதியில் மட்டும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்த நிலையில் இன்று காலை 8.15 மணியளவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Read Also -> 'இது கே.சி.ஆர். வெர்ஷன் 2.0' தெலுங்கானாவில் வைரலாகும் புகைப்படம்


Advertisement

Image result for mayawati

இதனையடுத்து  பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவை என்பதால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் அதிகப்பட்சமாக காங்கிரஸ் கட்சி 114 இடங்களை கைப்பற்றியுள்ளது. 1 தொகுதியில் வெற்றி கண்டுள்ள சமாஜ் வாதி, காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துள்ளதால் காங்கிரஸ் பலம் 115 ஆக இருந்தது. பகுஜன் சமாஜ் கட்சி  பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்காமல்,தன்னுடைய கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது காங்கிரஸ்க்கு பகுஜன் சமாஜ் ஆதரவு அளிக்கும் என்று கூறினார்.

Read Also -> 5 மாநிலங்களில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் 


Advertisement

Related image
 
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும், தேவைபட்டால் ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு எட்டாததால் கூட்டணி அமையவில்லை. சத்தீஸ்கரில் கூட்டணி அமைத்தும், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் தனித்தும் பகுஜன் சமாஜ் போட்டியிட்டது. குறிப்பிடத்தக்கது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement