“வம்புக்கு போகமாட்டோம், ஆனால்.. வந்ததை விட மாட்டோம்” - கோலி பளிச் பேட்டி

India-Won-t-Back-Down-If-Lines-Are-Crossed-Says-Virat-Kohli-Ahead-Of-1st-T20I

இந்திய அணி தானாக எந்த வம்புச் சண்டைக்கு செல்லக் கூடியது அல்ல என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.


Advertisement

இந்திய அணியின் கேப்டன்கள் ஒவ்வொரும் ஒவ்வொரு வகையான குணாதிசயங்களை கொண்டவர்கள். முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மிகவும் அமைதியானவர். வெற்றி, தோல்வி என எல்லா தருணங்களிலும் ஒரே மாதிரியான புன்னகையுடன் கடந்து போவார். 

           


Advertisement

ஆனால், தோனிக்கு முன்னாள் இருந்த சவுரவ் கங்குலி மிகவும் ஆக்ரோஷமானவர். 2002 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஒருநாள் தொடரின் போது தனது சட்டையை கழற்றி சந்தோஷத்தை வெளிப்படுத்தியதில் இருந்தே அவர் எவ்வளவு ஆக்ரோஷமானவர் என்பதை தெரிந்து கொள்ளலாம். தற்போது, கங்குலியின் வாரிசு போலவே ஒரு ஆக்ரோஷமான கேப்டனாக விராட் கோலி திகழ்ந்து வருகிறார். பேட்டிங், பீல்டிங் என எல்லா தருணங்களிலும் அவர் மிகவும் உக்கிரமாகவே காணப்படுவார். 

          

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 தொடர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி பிரிஸ்பேனில் நாளை நடக்கிறது. ஆஸ்திரேலியா புறப்படும் முன்னர் கேப்டன் விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தன்னுடைய ஆக்ரோஷமான குணத்தை குறித்து விரிவாக பேசினார்.


Advertisement

விராட் பேசுகையில், “வம்புச் சண்டை என்பது ஆடுகளத்தில் சூழ்நிலை எப்படி உள்ளது என்பதை பொருத்துதான் அமையும். எதிர் தரப்பினர் உங்களிடம் வம்புச் சண்டைக்கு வந்தால், அதற்கு நீங்கள் பதிலடி கொடுக்க வேண்டும். இந்திய அணி வம்புச் சண்டைகளை இழுக்கும் அணி கிடையாது. நம்முடைய சுயமரியாதைக்கு என்று ஒரு அளவுகோல் உள்ளது. அந்த எல்லையை யாராவது தாண்டினால், நாம் எதிர்த்து நிற்க வேண்டும்.

             

என்னை பொருத்தவரை ஆக்ரோஷம் என்பது வெற்றி பெருவதற்காக விளையாடுவது. ஒருவித கருத்துவெறி. அது ஒவ்வொரு பந்தினையும் என்னுடைய அணியின் வெற்றிக்கானதாக மாற்ற வேண்டும். ஆக்ரோஷம் என்பதற்கு ஒவ்வொருவருக்கும்  தனித்தனி அர்த்தங்கள் உண்டு. என்னைப் பொருத்தவரை எப்படியாவது வெற்றி பெற வேண்டும். பீல்டிங் செய்தாலும், மற்றவர்களுக்காக கை தட்டினாலும், வெளியே அமர்ந்திருந்தாலும், பேட்டிங், ரன்னிங் என எதுவாக இருந்தாலும், அதற்காக 120 சதவீதம் பங்களிப்பு செலுத்துவேன்” என்றார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement