’கஜா’ புயலால் சென்னைக்கு பாதிப்பு இல்லை என்றும், நாளை மறுநாள் வரை விட்டுவிட்டு மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து 300 கிலோ மீட்டர் தூரத்திலும் ’கஜா’ புயல் உள்ளதாகவும், இன்று இரவு சுமார் 11.30 மணியளவில் பாம்பன்- கடலூர் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்னும் 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் வானிலை குறித்து ஆய்வு செய்து அவ்வப்போது அறிவிப்பு வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தனது பேஸ்புக் பக்கத்தில் ’கஜா’ புயல் குறித்து தகவல் பதிவிட்டுள்ளார். அதில், ''கஜா புயலால் சென்னையில்தான் முதலில் மழை பெய்தது. ’கஜா’ புயல் கடற்கரையை நெருங்கும்போது, மற்ற மாவட்டங்களிலும் மழை பெய்யும். உள்மாவட்டங்களான மதுரை, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நாளை காலையில் இருந்து மழை பெய்யத் தொடங்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ''நாகை - வேதாரண்யம் இடையே இன்று நள்ளிரவு புயல் கரையைக் கடக்கும். அதற்குப்பின் உள்மாவட்டங்களில் மழை இருக்கும். ’கஜா’ புயல் தீவிரமடையும்போது, மேகக்கூட்டங்களை மிகநெருக்கமாக வைத்துக்கொள்ள முயற்சிக்கும். அதனால் புல்-எஃபெட் மூலம், சென்னைக்கு நாளை மறுநாள் வரை மழை பெய்யும். இது சென்னைக்கான புயல் அல்ல, ஒருபோதும் அவ்வாறு வரவில்லை. நமக்கு இப்போது கிடைக்கும் மழை போனஸ் போன்றது'' என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
இந்தியா: 24 மணி நேரத்தில் 2.61 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!
பிரதமர் மோடி மேற்குவங்க தேர்தலில் பிஸியாக இருக்கிறார் - மகாராஷ்டிரா முதல்வர் குற்றச்சாட்டு
கட்டுக்குள் அடங்காத கொரோனா - கடந்த 10 நாட்களில் தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
கொரோனாவால் மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் நடந்தால் தேர்தல் ஆணையமே பொறுப்பு - மம்தா பானர்ஜி
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி