சுய ஒழுக்கத்தோடு ஹெல்மெட் அணிந்து பயணிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு மக்களிடம் இருக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
வாகன ஓட்டிகள் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கக்கோரி, சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், ஹெட்மெட் அணிபவர்களின் எண்ணிக்கை 60 சதவிகிதம் அதிகரித்திருந்தாலும், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதே கிடையாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அப்போது ஹெல்மெட் அணிவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. மக்கள் பின்பற்றாத நிலையில் உத்தரவுகளை மட்டுமே பிறப்பித்து என்ன பயன் என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். பின்னர், முக்கிய சாலைகளில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளதா, இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறார்களா என்பன போன்ற பல்வேறு கேள்விகள் அரசு தரப்பிடம் முன்வைத்தனர். இதுதொடர்பாக விரிவான பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், நவம்பர் 28ஆம் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
Loading More post
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” - மருத்துவமனை விளக்கம்
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்