‘பேட்ட’ நடன இயக்குனர் ஆரம்பித்துள்ள புதிய ‘டான்ஸ் கஃபே’

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரபல நடன இயக்குனர் ஷெரிஃப் ‘டான்ஸ் கஃபே’ ஒன்றை புதிதாக திறந்துள்ளார்.


Advertisement

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் மூலம் சிறந்த டான்ஸராக அறியப்பட்டவர் ஷெரிஃப். அதன்பின்னர் இவர் தமிழ் சினிமாவில் ஒரு நடன இயக்குனராக உருவெடுத்தார். குறைந்த காலத்தில் பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றினார். ‘சூது கவ்வும்’படத்தில் வரும் ‘காசு பணம்’ என்ற பாடல் இவருக்கு ஒரு வெற்றியை கொடுத்தது. 

Read Also -> ‘தாய்ப்பால் வங்கிதான் என் குழந்தையை காப்பாத்துனது..!’ நெகிழும் ராஜலட்சுமி


Advertisement

அதன்பின்னர் ‘ராஜா ராணி’,‘குக்கூ’,‘ரோமியோ ஜூலியட், ‘எதிர் நீச்சல்’,‘காக்கி சட்டை’,‘தெறி’,‘கொடி’,‘போகன்’உள்ளிட்ட பல படங்களில் இவர் பணிபுரிந்துள்ளார். தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட’ படத்திலும் இவர் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஷெரிஃப் புதிய வகையில் ஒரு ‘டான்ஸ் கஃபே’வை தொடங்கியுள்ளார். 

அது என்ன ‘டான்ஸ் கஃபே’?


Advertisement

இதுதொடர்பாக அறிந்துக்கொள்ள சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள ஷெரிஃபின் ‘டான்ஸ் கஃபே’க்கு புதிய தலைமுறை இணையதளம் சார்பில் பயணித்தோம். அவரிடம் ‘டான்ஸ் கஃபே’ பற்றி விசாரித்தோம். “நான் ஒரு டான்ஸர். பொதுவாக டான்ஸ் கிளாஸுக்கு செல்பவர்கள் சில நாட்கள் ஆர்வத்துடன் செல்வார்கள். பின்னர் அங்கு சென்றால் வியர்வை வந்து களைப்பாகிவிடும். அந்த வகுப்பே வியர்வை வாடை அடிக்கும் என்ற மனநிலைக்கு வந்துவிடுவார்கள். அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக இந்தப் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளேன். இங்கு நடனம் கற்றுக்கொள்ள வருபவர்கள், ஒரு புத்துணர்ச்சியை உணர வேண்டும். அதற்காக இந்த ‘டான்ஸ் கஃபே’வை உருவாக்கியுள்ளேன்” என்கிறார்.

Read Also -> “நானே கேட்டு வாங்கி ‘சண்டைக்கோழி’ படத்தில் நடித்தேன்” - விஷால் ஃப்ளாஷ்பேக் 

மேலும் அவரே தொடர்ந்தார். “இங்கு நடனம் கற்றுக்கொள்ள வரமால், உணவு அல்லது பானம் குடிக்க வருபவர்கள், நேரடியாக நடனம் ஆடுவதை காண இயலும். அதன்மூலம் அவர்களுக்கு நடனத்தின் மீது ஈர்ப்பு உண்டாகும். அதுமட்டுமின்றி இங்கு உணவருந்த வருபவர்கள் நடனமாட விரும்பினால் ஒருமணி நேரம் நடனம் ஆடலாம். அந்த நடன வகுப்பு தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் நாங்கள் அதற்கான அறிவிப்பை கூறுவோம்.

Read Also -> ’ஸ்டார் வார்ஸ்’ பட தயாரிப்பாளர் கேரி மரணம்

பின்னர் அவர்கள் அதற்கான தொகையை செலுத்தி நடனம் ஆடலாம். நடனப்பயிற்சி பெறுவர்களுடன் அவர்கள் இணைந்து கொள்ளலாம். இதன்மூலம் அவர்களின் மன அழுத்தம் மற்றும் கவலைகளை மறந்து புத்துணர்ச்சி அடைவார்கள்” என்று தெரிவித்தார். 

Read Also -> தன்னைப் பற்றி கவலைப்படாமல் கடற்படை அதிகாரியை காப்பாற்ற விரைந்த ஐரிஸ் வீரர்! 

அங்கு வரும் சில வாடிக்கையாளர்களிடம் கேட்டபோது, “இது புதுமையான இடமாக இருக்கிறது. நாங்கள் குடும்பத்துடன் வரும்போது, எங்கள் குழந்தைகள் ஆர்வத்துடன் நடனம் ஆடுகின்றனர். அவர்களின் நடனத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த இடம் உள்ளது” என்று கூறுகின்றனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement