பங்களாதேஷை இன்று சந்திக்கிறது இந்தியா: பாம்பு டான்ஸ் உண்டா பாஸ்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, இன்று பங்களாதேஷை சந்திக்கிறது. மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.


Advertisement

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ் தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இரண்டு லீக்கிலும் தோல்வியடைந்த இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறிவிட்டன.

Read Also -> பிறந்த நாளில் மிரட்டிய ரஷித்கான்: சுருண்டது பங்களாதேஷ்! 


Advertisement

சூப்பர்-4 சுற்று இன்று தொடங்குகிறது. இந்த சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. துபாயில் நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணி, பங்களாதேஷை எதிர்கொள்கிறது.

லீக் சுற்றில் ஹாங்காங்கையும் பாகிஸ்தானையும் வென்றை இந்திய வீரர்கள், பங்களாதேஷை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்கள். ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர், ஷர்துல் தாகூர் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேற, ஜடேஜா, சித்தார்த் கவுல், தீபக் சாஹர் அணியில் இணைந்திருக்கிறார்கள்.  இன்றைய போட்டியில் பாண்ட்யாவுக்கு பதிலாக இன்னொரு பேட்ஸ்மேன் தேவையென்றால் மணீஷ் பாண்டே, பந்துவீச்சாளர் தேவையென்ரால் கலீல் அகமது சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் இந்திய அணி வலுவாக இருக்கிறது. 


Advertisement

Read Also -> இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது: சாதனை நதீம் மகிழ்ச்சி!

அதே போல பங்களாதேஷையும் எளிதான அணியாக நினைத்துவிட முடியாது. இந்தியாவுக்கு எதிராக அந்த அணி, முடிந்த வரை கடுமையாக போராடும். இதற்கு இலங்கையில் நடந்த நிடாஹஸ் கோப்பை தொடரின் பைனலை உதாரணமாக சொல்ல முடியும். அந்த அணியில் முஷ்பிஹுர் ரஹிம், ஷகிப் அல்-ஹசன், மகமுதுல்லா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் மோர்டாசா, முஸ்தபிஜூர் ரஹ்மான், மெஹிதி ஹசன் ஆகியோர் மிரட்டுகிறார்கள். அதனால் இன்றைய போட்டி பரபரப்பு நிறைந்ததாக இருக்கும்.


இலங்கை தொடரில், பாம்பு டான்ஸ் ஆடிய பங்களாதேஷ் வீரர்களை நினைவில் வைத்து ’இன்னைக்கு பாம்பு டான்ஸ் உண்டா பாஸ்?’ என்று சமூக வலைத்தளங்களில், இப்போதே கலாய்க்க தொடங்கி இருக்கிறார்கள் ரசிகர்கள்.

Read Also -> புற்றுநோயால்கூட பிரிக்க முடியாத சச்சினின் காவியக் காதல் 

(அந்த பாம்பு டான்ஸ்...)

இரு அணிகளும் இதுவரை 33 ஒரு நாள் போட்டிகளில் மோதி, 27-ல் இந்தியாவும், 5-ல் பங்களாதேஷும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

அபுதாபியில் இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன. இரண்டு போட்டிகளும் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
 

loading...

Advertisement

Advertisement

Advertisement