'நாங்கள் துபாய் வெப்பத்தை கண்டு பயப்படவில்லை' ரோகித் சர்மா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தத் தொடரின் தகுதிச்சுற்றுகளில் இலங்கை மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் தோல்வியடைந்து வெளியேறிவிட்டன.


Advertisement

இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆனால், இந்தியாவின் மிகப் பிரமாதமான பந்து வீச்சின் காரணமாக பாகிஸ்தான் அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்பு பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மா, ஷிகர் தவாண் ஆகியோரின் சிறப்பான பேட்டிங் காரணமா 29 ஆவது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது.


Advertisement

இந்த வெற்றிக் குறித்து கேப்டன் ரோகித் சர்மா கூறியது "பாகிஸ்தானுடனான வெற்றிக்கு முக்கியக் காரணம் பந்து வீச்சாளர்கள். துபாயில் நிலவும் கடுமையான வெப்பத்தை நாங்கள் கண்டுக்கொள்ளவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொருவிதமான படிப்பினை கிடைக்கும். ஹாங்காங் அணியுடன் நாங்கள் செய்த தவறுகளை பாகிஸ்தான் போட்டியில் திருத்திக்கொண்டோம். வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமல்லாமல் சுழற் பந்து வீச்சாளர்களும் தங்களது அபார திறமையை காட்டினர்".


Advertisement

மேலும் தொடர்ந்த ரோகித் சர்மா "பாகிஸ்தான் அணியின் பாபரும் ஷோயப்பும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த போதும், பவுலர்களிடம் பதற வேண்டாம் என கூறியதோடு, நீங்கள் சிறப்பாக பந்து வீசுங்கள் என்று சொன்னேன். அவர்களும் அப்படியே செய்து விக்கெட்டை வீழ்த்தினார்கள். ஒரு பேட்ஸ்மேனாக இருந்தாலும் ஹர்டிக் பாண்ட்யா இல்லாத நேரத்தில் கேதர் ஜாதவ் மிகச் சிறப்பாக பந்து வீசினார்" என ரோகித் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement