நடிகர் விக்ரம் நடித்த விழிப்புணர்வு குறும்படம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிசிடிவி கேமராக்களை நிறுவவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சென்னை பெருநகர காவல்துறையின் சார்பில் நடிகர் விக்ரம் நடித்த மூன்றாவது கண் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.


Advertisement

அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களில் குற்றவாளிகளை அடையாளம் காண்பதிலும், குற்றங்கள் நடக்காமல் தடுப்பதிலும் சிசிடிவி கேமராக்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அதனால் அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சென்னை காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

அந்தவகையில் நடிகர் விவேக் நடித்த விழிப்புணர்வு படம் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நடிகர் விக்ரம் நடித்த விழிப்புணர்வு படம் ‘மூன்றாவது கண்’ என்ற பெயரில் இன்று வெளியிடப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வெளியிட முதல் பிரதியை நடிகர் விக்ரம் பெற்றுக்கொண்டார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ரம், காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் சிசிடிவி கேமராக்களை பொறுத்துவதன் அவசியம் குறித்து விளக்கினர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement