ஒருபால் ஈர்ப்பு வழக்குகளில் உத்தரபிரதேசம் முதல் இடம்: அறிக்கை

UP-tops-list-of-gay-sex-cases

ஒருபால் உறவு சம்பந்தமான வழக்குகளில் உத்திரபிரதேசம் முதல் இடத்தை பிடித்துள்ளதாக செய்தி கிடைத்துள்ளது.


Advertisement

கடந்த வாரம் ஒருபால் உறவு குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய 5 பேர் கொண்ட அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் தன்பாலின உறவு குற்றமல்ல எனத் தெரிவித்தது. அத்துடன் தன்பாலின உறவைத் தடை செய்யும் சட்டம் 377ஐ ரத்து செய்தது. மற்றவர்களுக்கு உள்ள உணர்வு மற்றும் உரிமை ஒருபால் ஈர்ப்பு சமூகத்தினருக்கும் உள்ளது என நீதிமன்றம் குறிப்பிட்டு தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில் தேசிய குற்ற ஆவணப் பணியகம் ஒருபால் ஈர்ப்பு சம்பந்தமாக பதியப்பட்ட வழக்கு பட்டியல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2014 முதல் 2016 வரை  மொத்தத்தில் 4,690 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதாவது இந்த வழக்குகளில் அனைத்தும் 377 பிரிவின் கீழ் பதியப்பட்டவை. அதில் 2016ல் மட்டும் ஒருபால் ஈர்ப்பு சம்பந்தமாக 2,195 வழக்குகளில் பதியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 2015ல் 1,347 வழக்கும் 2014ல் 1,148 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 


Advertisement

இந்தியா முழுமைக்குமான இந்தக் குற்றப் பட்டியலில் உத்திரபிரதேசம்தான் முதல் இடத்தில் உள்ளது. 2016ல் மட்டும் 999 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 2015ல் மட்டும் 239 வழக்குகள் பதியப்பட்டதை விட அதிகம். மேலும் கேரளாவில் 207 வழக்குகளும் டெல்லியில் 183, மஹாராஷ்டிராவில் 170 பதியப்பட்டுள்ளன. 2015ல் கேரளா மற்றும் மஹாராஷ்டிராவில் மட்டும் 159 கே செக்ஸ் சம்பந்தமான வழக்குகளும் ஹரியானா 111, பஞ்சாப் 81 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

2015ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா முழுவதும் 1347 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் பாதிக்கப்பட்ட பலர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 814 குழந்தைகள் ஒருபால் ஈர்ப்பு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement