தமிழ் திரைப்பட தொழிலாளர் அமைப்பான ஃபெப்சி சார்பில் கட்டப்பட்டுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகேயுள்ள பையனூரில் 15 ஏக்கரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. திரைப்பட தொழிலாளர் அமைப்பான ஃபெப்சி சார்பில் இந்த படப்பிடிப்பு தளம் ரூ.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் படப்பிடிப்பு தளத்தை இன்று முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அத்துடன் திரைத்துறையைச் சேர்ந்த நடிகர், நடிகையர், தொழிலாளர் அமைப்பினர் ஏராளமானோரும் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய முதலமைச்சர், நாகரிக உலகில் மனிதன் உருவாக்கிய மிகச்சிறந்த படைப்பு திரைத்துறை என்றார். சமூக கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் திரைப்படங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்று கூறினார். ஜெயலலிதா பெயரில் அமைக்கப்படும் படப்பிடிப்புத் தளத்திற்கு ரூ.5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று தெரிவித்தார். திரைப்படத் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
Loading More post
சாரட் வண்டியில் வலம்வந்த நடராஜன்... விழாக்கோலம் பூண்ட சின்னப்பம்பட்டி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் - மோசடி செய்து முதல் பரிசு பெற்றது அம்பலம்?
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
“14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்” - நடராஜனுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
புனே: கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் திடீர் தீவிபத்து
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!