[X] Close >

ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான 5 வழக்குகள் தள்ளுபடி!

Karunanidhi-Death--High-Court-dismises-jayalalithaa-s-burial-case

மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட ஐந்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.


Advertisement

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 95. அவரது உடலை மெரினா கடற்கரையில், அண்ணாதுரை நினைவிடத்துக்கு அருகே அடக்கம் செய்ய தமிழக அரசிடம் திமுக கோரிக்கை வைத்தது. ஆனால், வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், சட்டச் சிக்கல்கள் இருப்பதாலும் அங்கு இடம் அளிக்க இயலாது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மெரினாவுக்கு பதிலாக காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கரில் இடம் தருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கக் கோரி திமுக சார்பில், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


Advertisement

 இந்த வழக்கை அவசர வழக்காக நேற்று இரவு உயர்நீதிமன்றம் விசாரித்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், சென்னை மாநகராட் சியும், தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும் வழக்கை இன்று காலை விசாரிப்பதாக அறிவித்தது. இதையடுத்து இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு எதிராக தொடரப்பட்ட 5 வழக்குகளை மனுதாரர்கள் திரும்பப் பெறுவதாக அறிவித் தனர். அதற்கு நீதிபதிகள் அனுமதியளித்தனர். ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக வேறு வழக்குகள் ஏதும் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். பின்னர் அந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close