JUST IN

Advertisement

கோலி சொன்ன டிப்ஸ் - இங்கிலாந்து பேட்ஸ்மேன் உக்கிரம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது. முன்னதாக எஸ்ஸெக்ஸ் கவுண்டி அணியுடனான 3 நாட்கள் பயிற்சி போட்டியில் இந்திய அணி பங்கேற்றது. 


Advertisement

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய 100.2 ஓவர்கள் விளையாடி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 395 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் 82 (95), விராட் கோலி 68 (93), லோகேஷ் ராகுல் 58 (92), முரளி விஜய் 53 (113), ஹர்திக் பாண்டியா 51 (82) ரன்கள் குவித்தனர். இதைதொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய எஸ்ஸெக்ஸ் அணி, 94 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. பின்னர் இரண்டாவது இன்னிஸை தொடங்கிய இந்திய அணி 21.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.


Advertisement

இதற்கிடையே எஸ்ஸெக்ஸ் அணியின் பேட்ஸ்மேன் வருண் சோப்ரா, இந்திய கேப்டன் விராட் கோலியிடம் பேட்டிங் குறித்து சந்தேகங்களை கேட்டு வந்தார். இதுதொடர்பாக பேசிய அவர், “விராட் கோலியிடம் பல பேட்டிங் ஷாட்கள் குறித்து விளக்கம் கேட்டன். அத்துடன் பந்துகளை தடுத்து விளையாடுவது குறித்து கேட்டேன். அவர் எனக்கு சில டிப்ஸ்களை கொடுத்தார். இந்த போட்டியில் நான் இந்தியாவின் முன்னணி வீரர்களுடன் விளையாடினேன். இது எனக்கு ஒரு சிறந்த அனுபவம்” என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கோலியின் டிப்ஸ் படி, அவர் உக்கிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். எதிர் அணி என்றும் நினைக்கமால் பெருந்தன்மையாக டிப்ஸ் வழங்கிய கோலிக்கு, கிரிக்கெட் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement