இந்தி படத்தில் அர்ஜூன் ராம்பால் ஜோடியாக நடிக்க இருப்பதாக நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார்.
தமிழில், வீரசேகரன் படம் மூலம் அறிமுகமானவர் அமலா பால். பிரபு சாலமன் இயக்கிய ’மைனா’ படம் அவருக்கு திருப்பு முனை தந்தது. பின் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விக்ரமுடன், ’தெய்வத் திருமகள்’, ஆர்யா வுடன், ’வேட்டை’, விஜய்யுடன் ’தலைவா’ உட்பட பல படங்களில் நடித்தார். பிறகு தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத் தது.
இதற்கிடையில் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர், பின்னர் விவாகரத்துப் பெற்றார். அடுத்து தனுஷுடன் ’வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடித்தார். சூப்பர் ஹிட்டான இந்தப் படம் அவருக்கு மீண்டும் வாய்ப்புகளைப் பெற்றுதந்தது. இப்போது, விஷ்ணு விஷாலின் ராட்சஷன், ஆடுஜீவிதம் என்ற மலையாள படம் ஆகியவற்றில் நடித்து வரு கிறார். இந்நிலையில் இந்தி படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
‘இந்தியில் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்துகொண்டிருந்தது. சிறந்த கதைகளை தேர்வு செய்வதற்காகக் காத்திருந்தேன். ஏற்கனவே பஞ்சாபி பெண்ணாக ஒரு இந்தி படத்தில் நடிக்க இருந்தேன். கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு பறி போனது. இப்போது பிரபல இந்தி இயக்குனர் நரேஷ் மல்கோத்ரா தனது படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார். சென்றேன். கதை சொன் னார். நான் நடித்த சில தமிழ்ப் படங்களை அவர் பார்த்திருப்பதால் ஆடிஷன் நடித்தவில்லை. நடிக்க சம்மதித்துவிட்டேன். இந்தப் படத்தின் கேரக்டர் எனக்கு நூறு சதவிகிதம் பொருந்தி இருக்கிறது. அர்ஜூன் ராம்பால் ஹீரோவாக நடிக்கிறார். த்ரில் லர் படமான இதன் ஷூட்டிங் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இமயமலை பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது’ என்று தெரிவித்துள்ளார் அமலா பால்!
Loading More post
சேலம்: பள்ளி சென்ற 10-ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா!
2-ம் கட்டத்தின்போது பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வாய்ப்பு
அண்ணா பல்கலை., துணைவேந்தர் சூரப்பாவை நேரில் அழைத்து விசாரிக்க முடிவு!
''சசிகலா உடல்நலக்குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது''- மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்
தவறு செய்தோர் யாராயினும் திமுக ஆட்சி அமைந்ததும் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவர்: ஸ்டாலின்
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!
“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்!” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி