ஐதராபாத் மாணவனைக் கொன்ற அமெரிக்க கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

Man-suspected-of-killing-Telangana-student-Sharath-Koppu-shot-dead

அமெரிக்காவில் படித்து வந்த ஐதராபாத்தைச் சேர்ந்த மாணவன் சரத் கொப்புவைக் கொன்ற கொள்ளையன், சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 


Advertisement

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் சரத் கொப்பு (26). கம்யூட்டர் என்ஜினீயரான இவர் மேற்படிப்புக்காக கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா சென்றார். கன்சாஸில் உள்ள மிசெளரி பல்கலைக்கழகத்தில் படித்துவந்தார். 

கடந்த 6-ம் தேதி கன்சாஸ் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு திடீரென்று துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் சரத் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். அவர் உடலில் ஐந்து குண்டுகள் பாய்ந்தன. கொள்ளையடிப்பதற்காக இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாக கன்சாஸ் போலீசார் தெரிவித்தனர். 


Advertisement

(கொள்ளையன்)

அதோடு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் வீடியோ காட்சியை வெளியிட்டு, குற்றவாளியை பற்றிய தகவல் சொன்னால், பத்தாயிரம் டாலர் பரிசளிக்கப்படும் என்று அறிவித்தனர். பின்னர் சரத்தின் உடல் ஐதராபாத் கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. 


Advertisement

இந்நிலையில் அந்தக் கொள்ளையனை பிடிக்க கன்சாஸ் போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று அவன் ஒரு காரில் சென்றுகொண்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவனை பின் தொடர்ந்தனர். ஒரு ஓட்டல் அருகே காரை நிறுத்திய அவனை போலீசார் பிடிக்க முயன்றபோது, துப்பாக்கியால் அவர்களை நோக்கிச் சுட்டான். இதில் மூன்று போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் திரும்பிச்சுட்டனர். கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் அவன் உயிரிழந்தான். அவனது பெயரை போலீசார் தெரிவிக்கவில்லை. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement