இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: சஹா இல்லை, தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காயம் குணமடையாததால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில், சஹா இடம்பெற மாட்டார் என்று கூறப்படுகிறது.


Advertisement

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 போட்டியில், தொடரை கைப்பற்றிய இந்திய அணி, இப்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன. தொடர் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி
நாளை நடக்கிறது.


Advertisement

இந்தத் தொடரை அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடக்கிறது. ஒரு நாள் போட்டித் தொடர் முடிந்தவுடன் டெஸ்ட் தொடருக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட இருக்கிறார்கள். அதில் குல் தீப், சேஹல் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம். அதோடு, அஸ்வின், ஜடேஜா, முரளி விஜய், ரஹானே, புஜாரா ஆகியோரும் 
அணிக்கு திரும்புகிறர்கள். இந்நிலையில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா அணிக்கு திரும்பமாட்டார் என்று தெரிகிறது.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியின் போது சஹாவுக்கு பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற்று வந்த தால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. இங்கிலாந்து தொடரில் அவர் பங்கேற்பார் என எதிர் பார்க்கப்பட்டது.


Advertisement

ஆனால், அவரது விரல் காயம் இன்னும் குணமாகவில்லை என்பதால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது.  அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் களமிறங்குவார். இன்னொரு விக்கெட் கீப்பராக பார்த்திவ் பட்டேல் அழைக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஒரு நாள் தொடரில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் இப்போது இந்திய அணியுடன் இங்கிலாந்தில்தான் இருக்கிறார். அவருக்கு கடந்த இரண் டு போட்டிகளிலும் ஆட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement