[X] Close >

தீபக் சாஹர், ரிஷப் பன்ட் அசத்தல்: வென்றது இந்திய ஏ அணி!

Rishabh-Pant-seals-tri-series-victory-for-India-A

இங்கிலாந்தில் நடந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ரிஷப் பன்ட்டின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.


Advertisement

இந்திய ஏ அணி, இங்கிலாந்தில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரில் பங்கேற்றது. இந்தியா ஏ, வெஸ்ட் இண்டீஸ் ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்து லயன்ஸ் அணியும் மோதின. இதில் இங்கிலாந்து லயன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. பின்னர் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய ஏ அணி, பைனலுக்கு முன்னேறியது . 


Advertisement

(சாம் ஹெயின்)

இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்திய ஏ அணிகளுக்கான இறுதிப் போட்டி லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய ஏ அணி, முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவரில் 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சாம் ஹெயின் அபார சதமடித்தார். அவர் 108 ரன்கள் எடுத்து தீபக் சாஹர் பந்தில் அவுட் ஆனார். மற்றொரு ஆட்டக்காரரான லிவிங்ஸ்டன் 83 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இந்திய தரப்பில் தீபக் சாஹர், அகமது தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.


Advertisement

பின்னர் 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய ஏ அணி. முந்தையப் போட்டிகளில் கலக்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் பிருத்வி ஷா 15 ரன்களிலும் மயங்க் அகர்வால் 40 ரன்களிலும் அவுட் ஆனார்கள். பின்னர் வந்த சுப்மான் கில் 20 ரன்னிலும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 44 ரன்னிலும் அவுட் ஆக, கடந்த போட்டியில் சதமடித்த ஹனுமா விஹாரியும் ரிஷப் பண்டும் பொறுப்பாக ஆடினர். விஹாரி 37 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனதும் குணால் பாண்ட்யா வந்தார். அவரும் ரிஷப்பும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 48.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து இந்திய ஏ அணி வெற்றி பெற்றது. ரிஷப் பண்ட் 64 ரன்களுட னும் குணால் பாண்ட்யா 34 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close