பாஜக கூட்டணி முறிவு - முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மெஹபூபா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கூட்டணியை முறித்துக் கொள்வதாக பாஜக அறிவித்துள்ளதை அடுத்து, தனது முதலமைச்சர் பதவியை மெஹபூபா முஃப்தி ராஜினிமா செய்துள்ளார். ‘முதலமைச்சர் மெஹபூபா தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளார்’ என்று ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த அமைச்சர் நயீம் அக்தர் கூறினார். 


Advertisement

இதனிடையே, அடுத்தகட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தனது இல்லத்தில் இன்று மாலை 4 மணிக்கு மெஹபூபா முஃப்தி ஆலோசனை நடத்துகின்றார். ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள கட்சி எம்.எல்.ஏக்களுக்கு அவசரமாக அழைப்பு விடுத்துள்ளார்.


Advertisement

பாஜகவின் கூட்டணி முறிவால் ஆட்சி கவிழ்ந்துள்ளது. இந்நிலையில், மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து முதலமைச்சர் மெஹபூபா விளக்கம் அளிக்க உள்ளார். 

காஷ்மீர் சட்டசபை:-

மொத்தம் - 87 இடங்கள்


Advertisement

பிடிபி    - 28
பாஜக    - 25
என்.சி    - 15
காங்கிரஸ்- 12
மக்கள் மாநாட்டு கட்சி - 2
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 1
மற்றவை - 4

loading...

Advertisement

Advertisement

Advertisement