[X] Close

’மீ டூ’வில் மீண்டும் பாலியல் புகார்: ஹாலிவுட் ஹீரோ சில்வஸ்டர் ஸ்டாலோன் மீது விசாரணை!

Subscribe
Actor-Sylvester-Stallone-under-probe-for-sexual-assault

பிரபல ஹாலிவுட் ஹீரோ சில்வஸ்டர் ஸ்டாலோன், 27 வருடத்துக்கு முன் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து விசாரணை தொடங்கியுள்ளது.


Advertisement

ஆஸ்கர் விருது வென்ற புகழ்ப் பெற்ற ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அவர்களுடன் தவறாக நடக்க முயற்சித்ததாகவும், நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளி‌யிட்டது. பிறகு பிரபல ஹாலிவுட் நடிகைகளான ஏஞ்சலினா ஜோலி, கைனெத் பால்ட்ரோ, காரா டெலவிங்னி உள்பட பல நடிகைகள் பலர், வெயின்ஸ் டீன் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை தெரிவித்தனர். சுமார் 80 நடிகைகள் அவர் மீது பாலியல் புகார் கூறியிருந்தனர். 


Advertisement

இதற்காக, சமூக வலைத்தளங்களில் #Metoo என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. இதில் ஏராளமான நடிகைகள், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்தப் புகார்களை மறுத்துள்ள ஹார்வியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் ஹீரோ சில்வஸ்டர் ஸ்டாலோன் மீதும் பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது. ஸ்டாலோனுக்கு இப்போது வயது 71. ஹாலிவுட்டில் ராக்கி, ராம்போ, த எக்ஸ்பேண்டபிள்ஸ் ஆகிய வரிசை படங்களில் நடித்தவர். மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகளுக்காகப் புகழ் பெற்ற இவர், 1990 ஆண்டு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, நடிகை ஒருவர், ’மீ டூ’ ஹேஸ்டேக்கில் கூறியிருந்தார். இதுபற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close