’இப்படியா டைட்டில் வைப்பீங்க?’ 'இருட்டு அறை'யில் தலைப்புக்கு தெலுங்கில் எதிர்ப்பு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

’இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தின் தெலுங்கு டைட்டிலுக்கு அங்குள்ள தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. 


Advertisement

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்த படம், 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. இதில் கவுதம் கார்த்திக், வைபவி, ஷா ரா, யாஷிகா, கருணாகரன், ராஜேந்திரன், பால சரவணன், ஜான்விஜய், மதுமிதா உள்பட பலர் நடித்துள்ளனர். 'ஹரஹர மஹாதேவகி' படத்தை எடுத்த சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கினார். அடல்ட் படமான இதில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக இருந்தன. அதோடு கதையும் ஆபாசமாக இருந்தது. இதனால் தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சிலர் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.


Advertisement

இயக்குனர் பாரதிராஜா, கொஞ்சம் காட்டமாகவே எதிர்ப்பை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ’சமீபத்தில் வெளியான முடை நாற்றமடிக்கும் ஒரு திரைப்படம் நம் தமிழ்நாடு இளைஞர்களை திசை திருப்பி, நம் ரசனையை மழுங்கடித்து, தற்போதைய தமிழகத்தின் பிரச்னைகளை மறக்கச் செய்யும் தந்திரமாகவே வெளியாகி இருக்கிறது. இவர்களுக்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும் துணை போவதால் தான், ஆபாசமான திரைப்படங்களுக்கும் தலைப்புகளுக்கும் அனுமதி கிடைக்கின்றன. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ‘ சென்சார் போர்டு’ என்ன செய்து கொண்டிருக்கிறது?’ என்று கேட்டிருந்தார்.

இந்நிலையில் இந்தப் படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட இருக்கிறார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. அதற்காக தமிழில் இடம்பெற்ற டைட்டிலை, அதே பெயரில் தெலுங்கில் பதிவு செய்தார். ’சீக்காட்டி கதிலோ சீத்தாகுத்துடு’ என்ற அந்த டைட்டிலுக்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அனுமதி மறுத்துவிட்டது. ‘இப்படியெல்லாம டைட்டில் வைப்பீங்க? இது ரொம்ப ஆபாசமா இருக்கு. தெலுங்கு சினிமாவில் இதை அனு மதிக்கமாட்டோம்’ என்று அவர்கள் கூறிவிட்டனர். இதையடுத்து டைட்டிலை மாற்றும் வேலையில் தயாரிப்பு தரப்பு இறங்கி இருக்கிறது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement