[X] Close >

3-ஆவது டெஸ்ட்: 258 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி

India-Vs-Australia-3-rd-Test-cricket

ஆஸ்திரேலிய ‌அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆவது நாள் ஆட்டத்தில், உணவு இடைவேளை வரை இந்திய அணி 258 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.


Advertisement

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-ஆவது கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 451 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில், ஒரு விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 42 ரன்களுடன், புஜாரா 10 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 3-ஆம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய முரளி விஜய் தனது அரை சதத்தைப் பதிவு செய்தார். தனது 50-ஆவது டெஸ்ட்டில் விளையாடிய முரளி விஜய்யின், 15-ஆவது அரைசதம் இது. மறுமுனையில் புஜாராவும் தனது பங்கிற்கு இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தார்.183 பந்துகளில் 82 ரன்கள் எடுத்திருந்தபோது முரளி விஜய் அவுட்டானார்.

உணவு இடைவேளை வரை, இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியை விட 258 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close