மஜதவுடன் அதிகாரபகிர்வு; காங்கிரஸ் இன்று முக்கிய ஆலோசனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் மேற்கொள்ளப்பட உள்ள அதிகாரப்பகிர்வு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.


Advertisement

கர்நாடகத்தில் நடைப்பெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிக்கு தேர்தல் நடைப்பெற்றது. வாக்கு எண்ணிக்கையில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் கர்நாடக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பாஜகவுக்கு 104இடங்களிலும், காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனையடுத்து 104 பேர் ஆதரவுடன் எடியூரப்பாவும், காங்கிரஸ் உள்ளிட்ட 117 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக குமாரசாமியும்‌ ஆட்சியமைக்க வஜுபாய் வாலாவிடம் உரிமை கோரினர். பாஜவை சேர்ந்த முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். 

                                                             


Advertisement

எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸின் மனுவை நள்ளிரவில் விசாரித்த நீதிமன்றம் எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது வழக்கை ஒத்திவைத்தது. ஆளுநர் அழைப்பின்படி  எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்ற சில நிமிடங்களில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. அப்போது சில முக்கிய உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சில வழிமுறைகளை நீதிமன்றம் கூறியது. நேற்றைய தினம் எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

                                                           

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் எடியூரப்பா பதவி விலகியதைத் தொடர்ந்து, குமாரசாமியை ஆளுநர் வஜூபாய் வாலா ஆட்சியமைக்க அழைத்தார். குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசத்தையும் ஆளுநர் வழங்கியுள்ளார். இதற்கிடையில் குமாரசாமி முதலில் திங்கள் கிழமை பதவியேற்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் மேற்கொள்ளப்பட உள்ள அதிகாரப்பகிர்வு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். கர்நாடக நிலவரங்களை நேரில் மேற்பார்வையிட்ட மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அசோக் கெலோட் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் அதிகார பகிர்வு குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். துணை முதல்வர் பதவி, காங்கிரசுக்கு எத்தனை அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. 
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement