முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஆளுநர் வஜூபாய் வாலாவைச் சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கினார்.


Advertisement

கர்நாடக சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக 104, காங்கிரஸ் 78, மதசார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் எந்தக் கட்சியும் அங்கு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாஜகவை ஆட்சி அமைக்க விடக்கூடாது என்ற முடிவில் காங்கிரஸ் உள்ளது. இதனால் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் சேர்ந்து ஆட்சி அமைக்கிறது. இதற்காக முதலமைச்சர் பதவியை மஜதவை சேர்ந்த குமாரசாமிக்கு விட்டுக்கொடுக்க காங்கிரஸ் தயாராக உள்ளது. 

இதுதொடர்பாக மாலை 5 மணியளவில் ஆளுநரை சந்தித்து குமாரசாமி ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகியது. இருப்பினும் ஆளுநர் தரப்பில் இருந்து இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, சற்று நேரத்திற்கு முன்னர் ஆளுநரை நேரில் சந்தித்தார். தங்கள் கட்சி குமாரசாமியை முதலைச்சராக்க முடிவு செய்துள்ளதால், சித்தராமையா தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். அதை ஆளுநர் பெற்றுக்கொண்டார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement