இன்று மோதல்: ஐதராபாத் பந்துவீச்சை சமாளிக்குமா கொல்கத்தா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள். மாலை 4 மணிக்கு டெல்லி-மும்பை அணிகளும் இரவு 8 மணிக்கு கொல்கத்தா- ஐதராபாத் அணிகளும் மோதுகின்றன.


Advertisement

நடப்பு சாம்பியன் மும்பை, மோதிய இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவி வெற்றிக் கணக்கை இன்னும் தொடங் காமல் இருக்கிறது. அதே போலதான் டெல்லி அணியும். காம்பீர் தலைமையிலான டெல்லி அணி, மோதிய இரண்டு போட்டி களிலும் தோல்வியையே தழுவியுள்ளது. இதனால் இந்தப் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயம் இரு அணிகளுக்கும் இருக்கிறது.


Advertisement

மும்பை அணியில் இளம் சுழல் மார்க்கண்டே மிரட்டி வருகிறார். பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் முக்கியமான விக்கெ ட்டுகளை வீழ்த்தி ஷாக் கொடுத்தார். ஆனால், மும்பை பேட்ஸ்மேன்கள் அதிக ரன் குவிக்கத் திணறிவருகிறார்கள். சிறந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களை கொண்ட அந்த அணி, முந்தையை போட்டிகளில் தோற்றிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

டெல்லி அணியிலும் இதே சிக்கல்தான். ரிஷாப், ஸ்ரேயாஸ் ஐயர், மேக்ஸ்வெல், முன்றோ, ஜேசன் ராய், கிறிஸ்டியன் உட்பட டாப் பேட்ஸ்மேன்கள் இருந்தும் திணறி வருகிறது அந்த அணி. பந்துவீச்சிலும் அப்படித்தான். இந்தப் போட்டியின் மூலம் வெற் றிக் கணக்கை தொடங்க இரண்டு அணிகளுமே முனையும் என்பதால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும்.


Advertisement

கொல்கத்தா- ஐதராபாத்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் ஐதராபாத்தை எதிர்கொள்கிறது தினேஷ் கார்த்திக்கின் டீம். ஐதராபாத் அணி, இதுவரை ஆடிய 2 லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற்று முன்னணியில் இருக்கிறது. அந்த அணிக்கு பந்துவீச்சு பெரும் பலம். ரஷித் கான் முக்கிய பந்துவீச்சாளராக இருக்கிறார்.

அதோடு சந்தீப் சர்மா, ஸ்டான்லேக், புவனேஷ்குமார், ஷகிப் அல் ஹசன், சித்தார்த் கவுல் என பந்துவீச்சாளர்கள் கலக்கி வருகிறார்கள். அதேபோல பேட்டிங்கில், கேன் வில்லியம்சன், தவான், மனீஷ் பாண்டே, யூசுப் பதான், சாஹா, தீபக் ஹூடா என மிரட்டும் வீரர்கள் இருக்கிறார்கள்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தனது முதல் போட்டியில் பெங்களூரு அணியை வென்றது. சென்னையில் நடந்த 2-வது போட்டியில், 202 ரன்கள் குவித்தும் தோல்வியை சந்தித்தது. இதற்கு கடைசி ஓவரை வினய்குமார் மோசமாக வீசியதும் காரணம் என்கிறார்கள். இதனால் இன்றைய போட்டியில் அவர் ஆடுவது சந்தேகம் எனத் தெரிகிறது. அவருக்கு பதில் ஜான் சன், நாகர்கோட்டி களமிறங்குவார்கள் எனத் தெரிகிறது.

பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் சுனில் நரேன் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி வருகிறார். அவர் மைதானத்தில் நின்றால் வரை ரன்ரேட் உயர்கிறது. மேலும் கிறிஸ் லின், தினேஷ் கார்த்திக், உத்தப்பா ஆகியோரின் வலுவான பேட்டிங், அணிக்கு பலம். இதனால் இந்தப் போட்டியும் த்ரில்லிங்காக இருக்கும்.

loading...

Advertisement

Advertisement

Advertisement