JUST IN

Advertisement

சென்னை அணிக்கு ‘தண்ணியில கண்டம்’: புனேவிலும் சிக்கல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையைத் தொடர்ந்து புனேவிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. 


Advertisement

11வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2ஆண்டு தடைக்கு பின்னர் தோனி தலைமையில் களமிறங்கியுள்ளது.இரண்டாண்டு தடைக்கு பின்னர் சென்னை அணி மீண்டும் களமிறங்கியதால் சென்னை அணி ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். 2வருடங்களுக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தில் போட்டிகள் நடைபெறும் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.இந்நிலையில் காவிரி விவகாரத்தில் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் விதித்த காலகெடு முடிந்தும் அரசு மேலாண்மை வாரியம் அமைக்க காலதாமதம் செய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டங்கள் வலுத்து வருகிறது.சென்னையில் நடைப்பெற இருந்த ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன.

சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டி ஏப்ரல் 10ஆம் தேதி நடைப்பெற்றது.இந்தப் போட்டிக்கு எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவழியாக இந்தப்போட்டி நடந்து முடிந்தது. இதனையடுத்து சென்னையில் நடைபெறும் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என காவல்துறையினர் சென்னை அணி நிர்வாகத்திடம் தெரிவித்தது.இதனையடுத்து சேப்பாக்கத்தில் நடைபெறவிருந்த 6 போட்டிகள் புனேவுக்கு மாற்றப்‌பட்டன. 


Advertisement

இந்நிலையில் சென்னை அணிக்கு மேலும் ஒரு சிக்கல் வந்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்காக, புனே மைதானத்தில் தண்ணீருக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என மாகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்திற்கு மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மைதான பராமரிப்புக்கு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், அதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை தெரிவிக்குமாறு மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement