[X] Close >

காவிரிக்காக விருதுநகரில் ஒருவர் தீக்குளிப்பு

Man-set-fire-himself-for-cauvery-management-board

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து விருதுநகரில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.


Advertisement

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் இன்னும் அமைக்கப்படாத நிலையில் நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தியும், கருப்புச் சட்டை அணிந்தும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.


Advertisement

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து விருதுநகரில் சரவணன் சுரேஷ் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 80 சதவீத தீக்காயமடைந்த அவருக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்ற இளைஞர் நேற்று தீக்குளித்து உயிரிழந்தார். இந்நிலையில் இன்றும் ஒருவர் காவிரிக்காக தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே காவிரி மேலாண்மை வாரியத்திற்காக பலவழிகளில் போராடலாம். எந்த வகையிலும் தற்கொலை தீர்வாகாது என பலதரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close