JUST IN

Advertisement

தமிழர்களின் உணர்வை மத்திய அரசு புரிந்துகொள்ளட்டும்: டிடிவி தினகரன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழக மக்களின் உணர்வை புரிந்துகொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.


Advertisement

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காவிரி கரையோர மாவட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போராட்டத்தில் ஈடு‌பட்டு வருகிறது. இன்று சே‌லம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினக‌ரன் தலைமை‌யில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

பின்னர் பேசிய டிடிவி.தினகரன், மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வை புரிந்து கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட‌ திட்டங்களை வகுத்து, விரைவில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார். அத்துடன் காவிரி விவகாரம் தொடர்பாக திமுகவின் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement